யட்சி.
வினோத ஒலி எழுப்பும்இம்மெளனத்தின் நீட்சி
முடிவில்லா துயரத்தை தருகிறது.
காற்றின் ஓசை மரணித்த
பின்பொழுதுகள்
சிறுமணலாய் உதிர்க்கின்றன
என் இருத்தலை.
நினைத்தவுடன் உருமாறி
பறவையாகும்
மனதின் சிறகடிப்புச்சத்தத்தில்
உயிர்த்தெழுகிறாள் எனக்குள்
வசிக்கும் யட்சி.