பக்கங்கள்

ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 ஏப்ரல், 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்...+நற்செய்தி..இதோ..



அனைவருக்கும் மன்னை மைந்தனின்

இனிய விக்ருதி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

புத்தாண்டு செய்தி:
 இந்த இனிய புத்தாண்டில்

பகுத்தறிவு பன்றிகளின் பேச்சை கேட்காமல்

மூடநம்பிக்கைகள் வழி செல்லாமல்

போலி சாமியார்கள் வழி சென்று மன உளைச்சல்  பெறாமல்

நமது இந்து மதம் சொன்ன அற்புத கருத்துக்களை

பின்பற்றி  இனிய வாழ்க்கையை வென்றிடுவோம்......

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

சிங்கையில் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கபூரைக் கண்டுபிடித்த

சர் ஸ்டாம்ஃபோர்ட் ராபிள்ஸ் தன்னுடன் நராயணப் பிள்ளை



என்ற இவரையும்


தமிழரையும் உடன் அழைத்து வந்தார் அவரை தொடர்ந்து பல

இந்தியர்கள் சிங்கபூரில் குடியேரினார்கள் குடியேரிய ஊரில்

கட்டிய முதல் கோவில்தான் மாரியம்மன்  கோவில் அந்த

காலத்தில் பல மாதங்கள் கப்பலில் பயணம் செய்து நோயிலும்

சிக்கல்களிலும் தப்பிப் பிழைத்து தரையிரங்கியவர்களுக்கு

அடைக்கலம் அளித்துள்ள இந்த மாரியம்மன் கோவில்

அப்போது முதல் இன,மத பேதங்கள் கடந்து அனைவரும்

நாடும் நாட்டின் சரணாலயங்களில் ஒன்றாக இந்த கோயில்

திகழ்ந்து வருகிறது



                                 சீனர் வீடுகள்,சங்கங்கள்,
                                 வர்த்தகஅமைப்புகள்
                                நிறைந்த சைனா டவுன்
                                மத்தியில் இக்கோயில்         

                               அமைந்திருந்தாலும்
                               இந்தியர் அல்லாத சுற்றுப்
                               புறத்தில் தர்ம சிந்தனையுள்ள
                              இடமாக இக்கோயில்
                              செழித்தோங்கி உள்ளது
                              சிங்கப்பூரில் நிலவும்
                              சமயப் புரிந்துணர்வுக்கும்
                              சகிப்பு தன்மைக்கும் இக்கோயில்
                             சிறந்த உதாரணம்
                                                      அதிபர் எஸ்.ஆர்.நாதன்
இத்தனை சிறப்பு மிக்க இந்த கோயிலின் குடமுழுக்கு 11/4/2010 இன்று இனிதே
நடை பெற்றது
குடமுழுக்கு விழாவை காண 20,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்
கூடினர் அனைவருக்கும் அன்னதம்,சிறப்பாக விழா குழுவினர்,தொண்டுழியர்கள் ஏற்பாடு செய்தார்கள் அவற்றின் புகைபடங்ள்
சில... 

பதிவு பிடித்து இருந்தல் உங்கள் பொன்னா ஓட்டு அளிக்கவும் 
பின்னுட்டங்களை இடவும்

செவ்வாய், 10 நவம்பர், 2009

ருத்ராட்சம்

ருத்ராட்சம் என்றதும் அனை வருக்கும், சிவனும், சிவனடியார்களும் தான் நினைவுக்கு வருவர். ருத்ராட்சக் கொட்டையும், விபூதிப் பட்டையும் சிவனடியார்களின் சின்னங்கள்; ஆனால், அதன் அருமை, பெருமை களை அறிந்தவர்கள் சிலரே! நம்ம தலைவர் போல

சிவனுறையும் கைலாசம் எனும் இமய மலைப் பகுதிகளில் மட்டுமே இது விளைகிறது. காட்டுப் பயிரான இது, தோட்டமிட்டு வளர்க்கப்படுவதில்லை. ஆதிகாலத்தில் முனிவர்கள் மட்டுமே இதை அறிந்து, பயன்படுத்தி வந்தனர். மூலிகை வகையைச் சேர்ந்த ருத்ராட்சம் மனிதர்களுக்கு மன அமைதியை வழங்குகிறது. மூச்சுக் கோளாறு, மூட்டு வலி, தூக்கமின்மை, மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து குணமளிக்கிறது.


மோக இச்சை, துறவறம் மேற்கொண்டவர்களுக்கு உணர்ச்சி ஏற்படாமலிருக்கவே ருத்ராட்ச மாலைகளை அணிந்தனர். ஆண்மை உணர்வை ருத்ராட்சம் குறைத்து விடும். இதனால், இதைக் குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருப்போர் அணியலாகாது; சிறு குழந்தைகளும், முனிவர்களும் அணியலாம்.


ருத்ராட்சக் கொட்டைகளை இரவில் செப்புப் பாத்திரத்தில் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வயிற்று கோளாறு உள்ளவர்கள் அந்த நீரை அருந்த, அனைத்துக் குறைபாடுகளும் நீங்கும்.


ருத்ராட்சத்தை 24 நாட்கள் நல்லெண்ணையில் ஊற வைத்து பிறகு அதை மூட்டுப் பகுதிகளில் தேய்க்க, மூட்டு வலி பூரண குணமாகும்.


ஏட்டுச் சுவடிகளில், ருத்ராட் சம் முதுமையைத் தவிர்த்து இளமையைத் தரும் இனிய மருந்துப் பொருள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதயக் கோளாறுகளை ருத்ராட்சம் குணப்படுத்துகிறது.


பித்தம், கபம், வாத குணங்களைக் கட்டுப்படுத்தவும், பெண் களின் மாதவிடாய் பிரச்னைகளை குணப்படுத்தவும் ருத்ராட் சத்திலிருந்து ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.


சீனாவின் அக்குபஞ்சர் முறையும், மனித நரம்புகளைத் தூண்டி ருத்ராட்சம் புத்துணர்ச்சி அளிப்பதும் ஒரே வகையைச் சார்ந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


ருத்ராட்சத்தில் 38 வகைகள் உள்ளன. "ஒரு முக ருத்ராட்சம்' என்பது உயர்வகையைச் சேர்ந்தது. வட மாநிலத்தவர் குடும்பங்களில் தங்கள் மூதாதையர் பயன்படுத்திய ருத்ராட்ச மாலை களை பூஜையில் வைத்து காலம், காலமாகப் போற்றி வருகின்றனர்.


ஒருமுக, மூன்று முக, நான்கு முக, ஆறுமுக, ஏழுமுக ருத்ராட்சம் என்று பல வகைகள் உள்ளன.


நவமுக ருத்ராட்சம் எதிரிகளை வீழ்த்தி, வெற்றியைத் தரும் என்று சொல்லப்படுகிறது. வழக்குகளில் வெற்றி பெற இந்த வகை ருத்ராட்சத்தை அணிந்து கொள்வர் சிலர்.


பல வண்ணங்களில் ருத்ராட்சங்கள் கிடைக்கின்றன... சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் ஆகிய வண்ணங்களில் காணப்படும் இவற்றை அமாவாசை, பவுர்ணமி, சூரிய, சந்திர உதயம் இவற்றை ஆதாரமாகக் கொண்டு அவற்றுக்கு ஏற்றபடி அணிகின்றனர் துறவிகள்.


பூமிக்கும், மோட்ச உலகிற்கும் இடையிலான தொடர்பு சாதனமாக சாமியார்கள் ருத் ராட்சத்தை நம்புகின்றனர்.


ருத்ராட்சங்களில் தரக்குறைவானவைகளும் உண்டு. இவற்றை அணிவதால் முழுமையான பலன் கிடைப்பதில்லை. தரமற்ற ருத்ராட்சங்களை எப்படிக் கண்டறிவது? இதை தண்ணீரில் போட்டால் மிதிக்கும்; தரமானவை - நீரில் அமிழ்ந்து விடும். தரமற்றவை எளிதில் விரிசல் விட்டு விடும்; உயர்ந்த வகை விரிசல் விடாது.


இந்தியாவிலிருந்து ருத்ராட்ச மாலைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.