நேற்று இரவு பெய்த அதே மழை
இன்றும் பெய்கிறது
நீ தொட்டுணர்ந்த ஈரத்துளி
இக்கணம் நதியில் கலக்கிறது
நீ அளித்த சிறிய பிரியங்கள்
வாழ்வில் உறைகிறது
நெஞ்சின் கூட்டிலிருந்து
புறப்பட்ட ஒற்றை வார்த்தை
ஏனோ உன் தனி அறையில்
அலைந்து கொண்டிருக்கிறது...வோட்டு போடலாமே...

