மாயன் காலண்டர்.. தற்போது பலர் மனதில் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கிறது.
ஆதி மனித சமூகமாகிய மாயன் சமூகத்தின் சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி. உலகின் மூலைகள் எங்கும் மக்களிடம் ஆவலையும் விளிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது .
இறுதியாக 5,125 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது மாயன் நாட்காட்டி குறிப்பிடும் இம்மனித சமூகம்.. அடுத்தது 2012 டிசம்பர் 21 மாயன் குறிப்பிடும் இந்நாள் பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது.ஆதி எகிப்பதிய மக்களால் கூட 2012 ஓர் பாரிய மாற்றத்திற்கான ஆண்டாக எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது.
புவியின் துருவப்படுதிகள் இடமாறுவதனால் புவியில் உலகளாவிய பாரிய இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டும் வெளிக்கிழம்பும் எரிமலை புகை மற்றும் புழுதிகளால் ஏறக்குறை 40 வருடங்களுக்கு சூரியனை பார்ப்பதே இயலாது போகும் என்கின்றனர் மாயன் நாட்காட்டியை நம்புகின்றவர்கள்..
இவற்றை எல்லாம் மறுக்கும் இன்னொரு பகுதயினர் புவியின் முடிவு என்பது சாத்தியமற்ற ஓர் விடையம் சிலவேளைகளில் புதிய யுகம் ஒன்று தோன்றக்கூடும் என்கின்றனர். ஏரிமலை வெடிப்புக்கள், நிலநடுக்கங்கள், சுனாமி, சூறாவளி என ஏற்படும் அனர்த்தங்களினால் மனித சமூகத்தின் பேரழிவு ஒன்று ஏற்படும் என கூறுகின்றது மாயன் நாட்காட்டி.
இந்த உலக உருண்டை சுழல்வது குறைந்து,நின்று பிறகு எதிர் திசையில் சுழலுமாம்.பூமியின் வட துருவம் தெற்காகி ,தென் துருவம் வடக்காகும்,இதனால் பூமியில் பேரழிவு ஏற்படும். இந்த பேரழிவு ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்கொண்டு விடும்.பிறகு மறுபடியும் முதலிருந்து உயிர்களின் சுழற்சி தொடங்கும்.
தொன்மையான இனமான மாயன்கள் கூறும் இந்த கருத்தை பற்றிய பயம் பல்வேறு தரப்பினரும் கொண்டது.ஆனால் இந்த இன மக்கள் நாளடைவில் நாகரிக சமுதாயத்தில் ஐக்கியமாகி விட்டார்கள்.உலக பேரழிவு என்பதை விவிலியமும்,கொரானும் 2012 வில் நடக்க கூடியது என கூறியுள்ளதாகவும் பல தரப்பினரும் கூறுகிறார்கள்.
இந்த விஷயத்தை பற்றிய விவாதம் வலையில் மட்டுமன்றி ,டீ கடை அரட்டைகளில் கூட காரசாரமாய் நடந்து கொண்டிருக்கிறது.எதிலும் ஒரு இலாபம் பார்த்து விட நினைக்கும் வெள்ளைக்காரன் இதிலும் ஒரு அருமையான வியாபாரம் செய்திருக்கிறான்.
இதை வியாபரமென்றாலும்,பல தரப்பையும் எளிதில் சென்றடையும் மீடியாவான சினிமாவில் சொல்லியிருப்பது....பலரையும் ரூம் போட்டு யோசிக்க வைத்திருக்கிறது. ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ரோலந்த் எம்ரிச், மாயன்கள் கூறும் கருத்தை கொண்டு ,உலகம் அழிந்தால் எப்படியெல்லாம் அழியும் என காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இந்தியாவின் நாகாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் பூமியின் திடீர் அபரிமித வெப்பத்தை நண்பர் ஒருவர் உறுதி செய்ய , வழக்கம் போல் அமெரிக்கர் ஒருவரால் அந்நாட்டு அதிபருக்கு சொல்லப்படுகிறது. தொடர்ந்து வரும் பேரழிவுக்காட்சிகள்,யாரையும் பதறவைத்துவிடும்.
பூமிப்பிழவு,எரிமளைவெடிப்பு,கடலே இடமாறும் அற்புத சுனாமி என படு த்ரில்லிங்காக போகிறது.வழக்கம்போல பணக்காரர்கள் மட்டும் பணம் கொடுத்து பேரழிவிலிருந்து தப்பிக்க முயல்வதும், இல்லாதப்பட்டோருக்காக ஒருவர் குரல் கொடுப்பதும் நமது வாழ்வில் காணும் யதார்த்தங்கள்.எரிமலை வெடிக்கும் பேரழிவை ,செத்து விடுவோம் என்று தெரிந்தும் ,கண்டு ரேடியோவில் வர்ணனை செய்யும் கதாபாத்திரம் சிலிர்க்கச்செய்கிறார்.
பேரழிவிலிருந்து தப்பிக்க நடுத்தர வசதியுடைய எழுத்தாளர் படும் கஷ்டங்களை அதிகம் சொல்லியிருந்தாலும்,பேரழிவில் சிக்கி சின்னாபின்னமாகும் சாமானியர்களை பற்றி சொல்ல மறந்துதான் போய்விட்டாரோ.
இப்படியொரு பேரழிவு நடந்தால் ... நடக்கிறதோ இல்லையோ ரோலன் எம்ரிச் காட்டில் பணமழை நிச்சயம்.பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் மறந்து விட்டு ஒரு முறை பார்க்கலாம்.
படம்பார்த்து விட்டு வெளியே வரும்போது ஒருவர் இன்னொருவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார் "ஆமா உலகம் அழியுமா?அழியாதா?
யாருக்குத்தெரியும்,இப்போது.?2012 ல் தெரிந்து விடும் மாயன் காலண்டர் உருவாக்கியது மாயையா? இல்லை மாயன்கள் தெறமையான பயபுள்ளைக தானா என்று. விமர்சனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக