பக்கங்கள்

வியாழன், 3 டிசம்பர், 2009

விஜய் பத்தி எனக்கு வந்த எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ்ல லேட்டஸ்ட்

சமிபத்தில் நண்பரின் வலை பதிவில் கண்டது நமக்கு இது மாதிரி விஜய கிண்டல் பண்ணி பதிவு போடுறதுனா ரொம்ப பிடிக்கும்பா ஹைய....


விஜய் பத்தி எனக்கு வந்த எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ்ல லேட்டஸ்ட்:

பராக் ஒபாமா பின்லேடனைப் பிடிச்சே ஆகணும்னு தன் ராணுவத்தை முடுக்கி விட்டாரு. ஒசாமா பயந்து, எங்கே ஒளிஞ்சுக்கலாம்னு தன் உதவியாளர் கிட்டே ஆலோசனை கேட்டாரு. “வேட்டைக்காரன் ரிலீசாகப் போகுது. அந்தத் தியேட்டர்ல போய் ஒளிஞ்சுக்குங்க. ஒரு பய வரமாட்டான் அங்கே”ன்னாராம் உதவியாளர். ஒசாமா உடனே, “அடப்போய்யா! தப்பிக்கிறதுக்கு வழி கேட்டா, சாகுறதுக்கு வழி சொல்றியே!”ன்னு கடுப்பாயிட்டாராம்.

என்னைக் கடுப்பேற்படுத்தின இன்னும் சில விஜய் ஜோக்ஸ்:

1. ஒரு குரங்கு, ஒரு குருவியை மீட் பண்ணிச்சாம். “உன்ன விட நான் ஃபேமஸ்”னுச்சாம். அதுக்கு குருவி, “இல்ல. நான்தான் ஃபேமஸ். ஏன்னா, என் பேர்ல ஒரு படமே வந்திருக்கு”ன்னுச்சாம். உடனே குரங்கு, “அடப் போவியா! அந்தப் படத்துல ஹீரோவே நான்தான்!”னுச்சாம்.

2. குருவி செத்துப் போச்சு; வில்லு ஒடைஞ்சு போச்சு. வேட்டைக்காரன் வந்து மட்டும் என்னத்த வெட்டி முறிக்கப் போறான்?

3. ஒரு மரத்துல பன்னிரண்டு குருவிங்க உக்கார்ந்திருந்துச்சு. ஒருத்தன் வந்து துப்பாக்கியால அதுங்களைச் சுட்டான். எல்லாக் குருவியும் பறந்தோடிடுச்சு. ஒரே ஒரு குருவி மட்டும் ஓடாம உக்கார்ந்திருந்துச்சு. ஏன் தெரியுமா? அது விஜய்யோட ‘குருவி’!

4. நடிகர்களுக்கெல்லாம் ஒரு தேர்வு வெச்சாங்க. ‘உங்களோட ஹிட் படங்களைப் பற்றி ஒரு குறிப்பு வரைக’ என்பதுதான் கேள்வி. உடனே விஜய் எழுந்திருச்சு சொன்னாராம்... “இது அவுட் ஆஃப் சிலபஸ்!” இன்னொரு தேர்வு. அதுல கொடுக்கப்பட்ட கேள்வி: ‘உங்களோட ஃப்ளாப் படங்களைப் பற்றி விவரித்து எழுதுக.’ விஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கித் தள்ளிக்கிட்டே இருந்தாராம்.

5. விஜய் படம் ஓடிட்டிருந்த தியேட்டர்ல எக்கச்சக்கக் கூட்டம். என்னடான்னு ஆச்சர்யப்பட்டுக் கேட்டான் ஒருத்தன். அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், “அதொண்ணுமில்லடா! இந்தப் படத்துக்கு எவனோ ரிசர்வ் பண்ண வந்திருக்கானாம். அவனைப் பார்க்கத்தான் இத்தனைக் கூட்டம்!”

6. விஜய் படம் ரிலீசாகியிருந்த தியேட்டர்ல ஈயாடிச்சு. சரியான கலெக்‌ஷனே இல்லை. தியேட்டர் ஓனர் ஒரு ஐடியா பண்ணினார். எல்லாரும் ஃப்ரீயா உள்ளே வரலாம்னு சொல்லிட்டார். ஜனங்க முண்டியடிச்சுக்கிட்டு கும்பல் கும்பலா உள்ளே போனாங்க. அதுக்கப்புறம் கதவை மூடிட்டு, “இப்ப யாராவது வெளியே போகணும்னா இத்தனை ரூபாய் கொடுக்கணும்”னு டிக்கெட் கட்டணம் வசூல் பண்ண ஆரம்பிச்சாராம். பிளாக்ல எல்லாம் வித்துப் போயி, எக்கச்சக்க வசூலை அள்ளிக் குமிச்சிருச்சாம்.

7. விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!

8. ஒருத்தன்: ‘2012’ படம் வந்திருக்கே, பார்த்துட்டியா?
மற்றவன்: ஓ! ‘வேட்டைக்காரன்’ ரிலீசானா உலகம் என்ன ஆகும்கிறதை அப்பட்டமா காட்டியிருக்காங்க!

4 கருத்துகள்:

Romeoboy சொன்னது…

இந்த பதிவை எழுதியவர் அனுமதி பெற்று இருக்கலாமே??



http://padithurai.blogspot.com/2009/12/blog-post_02.html

ராஜேஷ் சொன்னது…

நன்றி ரோமியொ மன்னிக்கவும் ஆர்வமிகுதி

Prathap Kumar S. சொன்னது…

ஹஹஹஹ...
தனியா உக்காந்துத சிரிக்கவச்சுட்டிங்களே தலைவா..
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

விஜய் கலாய்த்தல் பதிவுகளை படிக்க விருப்பம்னா என்னோட வலைப்பூக்கு வாங்க...

என்னங்க டெம்ப்ளேட் இது படிக்கவே முடில...எழுத்துக்கள் சரியா தெரியமாட்டேங்குது...மாத்திடுங்க...

ராஜேஷ் சொன்னது…

நாஞ்சில் சொன்னது
மற்றிவிட்டேன் நண்பா