பக்கங்கள்

செவ்வாய், 16 நவம்பர், 2010

அர்த்த சாஸ்திரம்

வணக்கம் நண்பர்களே நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களுடன்
இணைவதில் மகிழ்ச்சி!

இன்றைய உலகில் சில அரசியல்வாதிளை அவன் ஒரு சாணக்கியன்
என கூறுவோம் ஆனால் அந்த பெயருக்கு சொந்தமானவரை பற்றியும்
அவரின் அற்ப்புத நூலான அர்த்தசாஸ்திரம் பற்றியும்
நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பு குறைவே என கருதுகிறேன்
உலகத்தையே ஆளும் ஞானத்தை தருவது இந்த அர்த்தசாஸ்திரம்
இதில் பல அரிய விசயங்கள் அடங்கியுள்ளன.

இன்றைய நவீன யுகம் இவரின் சில வரைமுறைகளுக்கு பொருந்தாமல்
இருப்பினும் பல விடையங்கள் நம்மை ஆச்சர்யங்களை ஏற்படுத்தும்
எனபதில் சந்தேகம் இல்லை.
இனி அவரது வரலாற்றை சுருக்கமாக காண்போம்

மௌரியப் பேரரசைத் தோற்றுவித்த சந்திரகுப்தனின் முதன்மை அமைச்சராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் சாணக்கியர். இவர் மௌரியப் பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர். கௌடில்யர், விட்ணுகுப்தர் என்ற பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார். ஈடற்ற அரசியல் இலக்கியமான அர்த்தசாத்திரத்தைப் படைத்தவர் இவரேயாவார். இவர் பொருளியலின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். மேற்கத்திய உலகில் இவர் இந்தியாவின் மாக்கியவெல்லி என்று அறியப்படுகிறார். இவர் தக்சசீலப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார்.

படைப்புகள்

இவர் அர்த்தசாத்திரம், நீதிசாத்திரம் ஆகிய நூல்களைப் படைத்துள்ளார். அர்த்தசாத்திரம், பொருளாதாரக் கொள்கைகள், நலத்திட்டங்கள், பிற நாட்டு உறவுகள், போர்முறைகள் குறித்து விரிவாக விவரிக்கிறது. நீதி சாத்திரம் வாழ்வியல் நன்னெறிகள் பற்றிப் பேசுகிறது. இந்நூல் இந்திய வாழ்க்கை முறைகள் குறித்துச் சாணக்கியருக்கு இருந்த ஆழ்ந்த அறிவைக் காட்டுகிறது. இந்நூல் சாணக்கிய நீதி என்றும் அழைக்கப்படுகிறது.

கதைகள்

பின்வருபவை சாணக்கியர் வாழ்வில் நடந்த்தாக நம்பப்படும் சுவையான சம்பவங்கள்:
  • பிற்காலத்தில் அரசனாவார் என்பதைக் குறிக்கும் வகையில் பிறக்கும் போதே பற்களோடு பிறந்தார். அந்தணர்கள் அரசாள்வது முறையற்றது என்பதால் இவரது பற்கள் உடைக்கப்பட்டன. அதனால் இவர் வேறொருவன் மூலம் அரசாள்வான் என்று கணிக்கப்பட்டது.
  • நந்த அரசன் சாணக்கியரை அவையிலிருந்து வெளியேற்றியதே இவரை பழிதீர்க்கும் உறுதியேற்கக் காரணம்.
  • தம் விருப்பப்படி ஆட்சி நடத்தத் தகுதியான ஒருவனைத் தேடி, இறுதியில் சந்திரகுப்தனைத் தேர்ந்தெடுத்தார்
  • நந்த அரசனை வீழ்த்தும் முதல் முயற்சியில் தோல்வி அடைந்தார். சூடான அப்பத்தை, ஓரத்திலிருந்து புக்காமல் நடுவில் கைவைத்துக் கையைச் சுட்டுக்கொண்ட மகனைத் திட்டும் ஒரு தாயைக் கண்ட போது தம் தவற்றை உணர்ந்தார்.
  • சந்திரகுப்தன் மன்னனாக இருந்த போது அவனுடைய உணவில் நஞ்சைச் சேர்த்து (அவனறியாமல்) உண்ணச் செய்தார். அவன் உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க இவ்வாறு செய்தார். இதையறியாத மன்னன் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தன் மனைவிக்கு தன் உணவை ஒரு நாள் கொடுத்தான். இதையறிந்த சாணக்கியர் அரசகுல வாரிசைக் காப்பதற்காக அரசியின் வயிற்றைப் பிளந்து குழந்தையை வெளியே எடுத்தார். அவனுக்கு பிந்துசாரன் என்று பெயரிட்டார்.
  • ஒரு முறை மௌரியப் படை ஒரு குகையில் ஒழிய நேர்ந்த்தது. அவர்களிடம் உணவு இல்லாததால் அனைவரும் பசியால் வாடினர். அப்போது சாணக்கியர் ஓர் எறும்பு ஒற்றைச் சோற்றைச் சுமந்துக்கொண்டுச் செல்வதைக் கவனித்தார். அவர்களைச் சுற்றி எங்கும் உணவு தென்படவில்லை. எனவே வீரர்களைக் குகையைச் சோதனை செய்யப் பணித்தார் சாணக்கியர். எதிரிகள் குகைக்குக் கீழே உணவருந்திக் கொண்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். உடனே வீரர்களோடு இவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

தமிழகத் தொடர்பு

தமிழகத்தில் இருந்த சோழியர் என்ற பிராமண குலத்தவர், சாணக்கியர் தம் இனத்தைச் சார்ந்தவர் என்கின்றனர். இதே போன்று, அபிதசிந்தாமணி, சாணக்கியர் திராமிள இனத்தைச் சார்ந்தவர் என்று கூறுகிறது. (திராமிள என்பது திராவிட என்னுஞ் சொல்லின் மூலச் சொல்லாகக் கருதப்படுகிறது)

ஊடகம்

1990ல் தூர்தர்சனில் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சித் தொடர் சாணக்கியா அவரது வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் எடுத்துக்காட்டியது.

அடுத்த பகுதியில் அவரின் நூலில் இருந்து சில பகுதிகளை காண்போம்
நன்றி...

திங்கள், 17 மே, 2010

சிங்கையின் இரண்டு மிக பெரிய ஒருங்கிணைந்த உல்லாச தளம்

1.முதலில் செந்தோசா தீவில் ஜனவரி 20ம் தேதி திறக்கப்பட்ட Resort world
ஒருங்கிணைந்த உல்லாச தளம் இது 4.4 பில்லியன் அமெரிக்க டாலரில் கட்டபட்டது
இதில் யுனிவர்சல் ஸ்டுடியோ கேசினோ எனப்படும் சூதாட்டம் 5*நட்ச்சதிர தங்கும் விடுதி
பல்வேறு பொழுது போக்குஅம்சங்கள் நிறைந்துள்ளன இதில் வெளிநாட்டினர்களுக்கு நுழைவுகட்டணம் கிடையாது சிங்கபூரின் வசதி குறைந்த குடிமக்கள் சூதாட்டத்தில்
பணத்தை இழந்து தவிப்பதை கருத்தில் கொண்டு சிங்கப்பூர் குடிமக்கள் நிரந்திரவாசி ஆகியோருக்கு
$100 வெள்ளி நுழைவு கட்டணம் வசூலிக்கபடுகிறது.
இங்கு உலகத்தின் மிகப் பெரிய இரட்டை ரோலர் கோஸ்ட்டர் விளையாட்டு, ஹாலிவுட்டில் எவ்வாறு ஒலிப்பதிவு செய்யப்படுகிறது, ஜூராஸிக் பார்க்கை சுற்றிப் பார்ப்பது ஆகிய கேளிக்கை விளையாட்டுகள் ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசா ஒருங்கிணைந்த உல்லாச தளத்தில் இடம்பெற்றுள்ளது
அமெரிக்காவில் ஹாலிவுட், காலிஃபோர்னியா, ஒர்லேண்டோ, ஃபுளோரிடா, ஜப்பானில் ஒசாகா ஆகிய நகரங்களில் உள்ள பெரும் யுனிவர்சல் ஸ்டூடியோஸ் கேளிக்கை பூங்கா
சிங்கப்பூரில் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது
அவற்றின் சில புகைபடங்கள்
               சூதாட்டகூடத்தின் நுழைவாயில்

அலங்கார கண்ணாடி மேற்கூறை
  
கடை தொகுதி



யுனிவர்சல் ஸ்டுடியோ


 

 




வாகனம் நிறுத்துமிடம்


மேலும் இதை பற்றிய காணொளி தொகுப்பு

இது சிங்கையின் இரண்டவது உல்லாசதலம் மெரினா சேண்ட்
மூன்று கோபுரம் அதில் நட்சத்திர தங்கும் விடுதி
மூன்றையும் ஒன்றினைத்து
அதன் மேல் பூங்ககா அமைக்கப்பட்டுவருகிறது
பூங்கா வரும் ஜீன் 23ம் தேதி திறக்கப்படவுள்ளது
தற்போது கேசினோ,தங்கும் விடுதி,கடைதொகுதி,உணவகம்,பொழுதுபோக்கு
அம்சங்கள் இயங்கிவருகிறது
இது நடை பாதைக்கென பிரத்யேகமாக வடிவமைக்க பெற்ற  பாலம்
கோபுரத்தின் உட்புறதோற்றம்
மரத்தொட்டி
செடித்தொட்டி
 
தண்ணித்தொட்டி
இது குப்பை தொட்டி
இதன் அருகே அமைந்துள்ள
உலகின் இரண்டவது பெரிய ராட்சத ராட்டினம்
இவற்றின் பின்னனியில்
இந்த உழைக்கும் வர்க்கத்தினர்
 
அப்பறம் என்ன வழக்கமா
எல்லாரும் கேட்பதுதான்
 இந்த பதிவுக்கு உங்கள் பொன்னான் 

ஓட்டுக்களை வழங்குமாறு கேட்பதுதான்
மறக்காம குத்திருங்க