பக்கங்கள்

வெள்ளி, 13 நவம்பர், 2009

மாயன் காலண்டர்.. தற்போது பலர் மனதில் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கிறது.

ஆதி மனித சமூகமாகிய மாயன் சமூகத்தின் சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி. உலகின் மூலைகள் எங்கும் மக்களிடம் ஆவலையும் விளிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது .

இறுதியாக 5,125 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது மாயன் நாட்காட்டி குறிப்பிடும் இம்மனித சமூகம்.. அடுத்தது 2012 டிசம்பர் 21 மாயன் குறிப்பிடும் இந்நாள் பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது.ஆதி எகிப்பதிய மக்களால் கூட 2012 ஓர் பாரிய மாற்றத்திற்கான ஆண்டாக எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது.

புவியின் துருவப்படுதிகள் இடமாறுவதனால் புவியில் உலகளாவிய பாரிய இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டும் வெளிக்கிழம்பும் எரிமலை புகை மற்றும் புழுதிகளால் ஏறக்குறை 40 வருடங்களுக்கு சூரியனை பார்ப்பதே இயலாது போகும் என்கின்றனர் மாயன் நாட்காட்டியை நம்புகின்றவர்கள்..

இவற்றை எல்லாம் மறுக்கும் இன்னொரு பகுதயினர் புவியின் முடிவு என்பது சாத்தியமற்ற ஓர் விடையம் சிலவேளைகளில் புதிய யுகம் ஒன்று தோன்றக்கூடும் என்கின்றனர். ஏரிமலை வெடிப்புக்கள், நிலநடுக்கங்கள், சுனாமி, சூறாவளி என ஏற்படும் அனர்த்தங்களினால் மனித சமூகத்தின் பேரழிவு ஒன்று ஏற்படும் என கூறுகின்றது மாயன் நாட்காட்டி.

இந்த உலக உருண்டை சுழல்வது குறைந்து,நின்று பிறகு எதிர் திசையில் சுழலுமாம்.பூமியின் வட துருவம் தெற்காகி ,தென் துருவம் வடக்காகும்,இதனால் பூமியில் பேரழிவு ஏற்படும். இந்த பேரழிவு ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்கொண்டு விடும்.பிறகு மறுபடியும் முதலிருந்து உயிர்களின் சுழற்சி தொடங்கும்.

தொன்மையான இனமான மாயன்கள் கூறும் இந்த கருத்தை பற்றிய பயம் பல்வேறு தரப்பினரும் கொண்டது.ஆனால் இந்த இன மக்கள் நாளடைவில் நாகரிக சமுதாயத்தில் ஐக்கியமாகி விட்டார்கள்.உலக பேரழிவு என்பதை விவிலியமும்,கொரானும் 2012 வில் நடக்க கூடியது என கூறியுள்ளதாகவும் பல தரப்பினரும் கூறுகிறார்கள்.

இந்த விஷயத்தை பற்றிய விவாதம் வலையில் மட்டுமன்றி ,டீ கடை அரட்டைகளில் கூட காரசாரமாய் நடந்து கொண்டிருக்கிறது.எதிலும் ஒரு இலாபம் பார்த்து விட நினைக்கும் வெள்ளைக்காரன் இதிலும் ஒரு அருமையான வியாபாரம் செய்திருக்கிறான்.

இதை வியாபரமென்றாலும்,பல தரப்பையும் எளிதில் சென்றடையும் மீடியாவான சினிமாவில் சொல்லியிருப்பது....பலரையும் ரூம் போட்டு யோசிக்க வைத்திருக்கிறது. ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ரோலந்த் எம்ரிச், மாயன்கள் கூறும் கருத்தை கொண்டு ,உலகம் அழிந்தால் எப்படியெல்லாம் அழியும் என காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இந்தியாவின் நாகாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் பூமியின் திடீர் அபரிமித வெப்பத்தை நண்பர் ஒருவர் உறுதி செய்ய , வழக்கம் போல் அமெரிக்கர் ஒருவரால் அந்நாட்டு அதிபருக்கு சொல்லப்படுகிறது. தொடர்ந்து வரும் பேரழிவுக்காட்சிகள்,யாரையும் பதறவைத்துவிடும்.

பூமிப்பிழவு,எரிமளைவெடிப்பு,கடலே இடமாறும் அற்புத சுனாமி என படு த்ரில்லிங்காக போகிறது.வழக்கம்போல பணக்காரர்கள் மட்டும் பணம் கொடுத்து பேரழிவிலிருந்து தப்பிக்க முயல்வதும், இல்லாதப்பட்டோருக்காக ஒருவர் குரல் கொடுப்பதும் நமது வாழ்வில் காணும் யதார்த்தங்கள்.எரிமலை வெடிக்கும் பேரழிவை ,செத்து விடுவோம் என்று தெரிந்தும் ,கண்டு ரேடியோவில் வர்ணனை செய்யும் கதாபாத்திரம் சிலிர்க்கச்செய்கிறார்.

பேரழிவிலிருந்து தப்பிக்க நடுத்தர வசதியுடைய எழுத்தாளர் படும் கஷ்டங்களை அதிகம் சொல்லியிருந்தாலும்,பேரழிவில் சிக்கி சின்னாபின்னமாகும் சாமானியர்களை பற்றி சொல்ல மறந்துதான் போய்விட்டாரோ.

இப்படியொரு பேரழிவு நடந்தால் ... நடக்கிறதோ இல்லையோ ரோலன் எம்ரிச் காட்டில் பணமழை நிச்சயம்.பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் மறந்து விட்டு ஒரு முறை பார்க்கலாம்.

படம்பார்த்து விட்டு வெளியே வரும்போது ஒருவர் இன்னொருவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார் "ஆமா உலகம் அழியுமா?அழியாதா?

யாருக்குத்தெரியும்,இப்போது.?2012 ல் தெரிந்து விடும் மாயன் காலண்டர் உருவாக்கியது மாயையா? இல்லை மாயன்கள் தெறமையான பயபுள்ளைக தானா என்று. விமர்சனம்

செவ்வாய், 10 நவம்பர், 2009

ருத்ராட்சம்

ருத்ராட்சம் என்றதும் அனை வருக்கும், சிவனும், சிவனடியார்களும் தான் நினைவுக்கு வருவர். ருத்ராட்சக் கொட்டையும், விபூதிப் பட்டையும் சிவனடியார்களின் சின்னங்கள்; ஆனால், அதன் அருமை, பெருமை களை அறிந்தவர்கள் சிலரே! நம்ம தலைவர் போல

சிவனுறையும் கைலாசம் எனும் இமய மலைப் பகுதிகளில் மட்டுமே இது விளைகிறது. காட்டுப் பயிரான இது, தோட்டமிட்டு வளர்க்கப்படுவதில்லை. ஆதிகாலத்தில் முனிவர்கள் மட்டுமே இதை அறிந்து, பயன்படுத்தி வந்தனர். மூலிகை வகையைச் சேர்ந்த ருத்ராட்சம் மனிதர்களுக்கு மன அமைதியை வழங்குகிறது. மூச்சுக் கோளாறு, மூட்டு வலி, தூக்கமின்மை, மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து குணமளிக்கிறது.


மோக இச்சை, துறவறம் மேற்கொண்டவர்களுக்கு உணர்ச்சி ஏற்படாமலிருக்கவே ருத்ராட்ச மாலைகளை அணிந்தனர். ஆண்மை உணர்வை ருத்ராட்சம் குறைத்து விடும். இதனால், இதைக் குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருப்போர் அணியலாகாது; சிறு குழந்தைகளும், முனிவர்களும் அணியலாம்.


ருத்ராட்சக் கொட்டைகளை இரவில் செப்புப் பாத்திரத்தில் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வயிற்று கோளாறு உள்ளவர்கள் அந்த நீரை அருந்த, அனைத்துக் குறைபாடுகளும் நீங்கும்.


ருத்ராட்சத்தை 24 நாட்கள் நல்லெண்ணையில் ஊற வைத்து பிறகு அதை மூட்டுப் பகுதிகளில் தேய்க்க, மூட்டு வலி பூரண குணமாகும்.


ஏட்டுச் சுவடிகளில், ருத்ராட் சம் முதுமையைத் தவிர்த்து இளமையைத் தரும் இனிய மருந்துப் பொருள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதயக் கோளாறுகளை ருத்ராட்சம் குணப்படுத்துகிறது.


பித்தம், கபம், வாத குணங்களைக் கட்டுப்படுத்தவும், பெண் களின் மாதவிடாய் பிரச்னைகளை குணப்படுத்தவும் ருத்ராட் சத்திலிருந்து ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.


சீனாவின் அக்குபஞ்சர் முறையும், மனித நரம்புகளைத் தூண்டி ருத்ராட்சம் புத்துணர்ச்சி அளிப்பதும் ஒரே வகையைச் சார்ந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


ருத்ராட்சத்தில் 38 வகைகள் உள்ளன. "ஒரு முக ருத்ராட்சம்' என்பது உயர்வகையைச் சேர்ந்தது. வட மாநிலத்தவர் குடும்பங்களில் தங்கள் மூதாதையர் பயன்படுத்திய ருத்ராட்ச மாலை களை பூஜையில் வைத்து காலம், காலமாகப் போற்றி வருகின்றனர்.


ஒருமுக, மூன்று முக, நான்கு முக, ஆறுமுக, ஏழுமுக ருத்ராட்சம் என்று பல வகைகள் உள்ளன.


நவமுக ருத்ராட்சம் எதிரிகளை வீழ்த்தி, வெற்றியைத் தரும் என்று சொல்லப்படுகிறது. வழக்குகளில் வெற்றி பெற இந்த வகை ருத்ராட்சத்தை அணிந்து கொள்வர் சிலர்.


பல வண்ணங்களில் ருத்ராட்சங்கள் கிடைக்கின்றன... சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் ஆகிய வண்ணங்களில் காணப்படும் இவற்றை அமாவாசை, பவுர்ணமி, சூரிய, சந்திர உதயம் இவற்றை ஆதாரமாகக் கொண்டு அவற்றுக்கு ஏற்றபடி அணிகின்றனர் துறவிகள்.


பூமிக்கும், மோட்ச உலகிற்கும் இடையிலான தொடர்பு சாதனமாக சாமியார்கள் ருத் ராட்சத்தை நம்புகின்றனர்.


ருத்ராட்சங்களில் தரக்குறைவானவைகளும் உண்டு. இவற்றை அணிவதால் முழுமையான பலன் கிடைப்பதில்லை. தரமற்ற ருத்ராட்சங்களை எப்படிக் கண்டறிவது? இதை தண்ணீரில் போட்டால் மிதிக்கும்; தரமானவை - நீரில் அமிழ்ந்து விடும். தரமற்றவை எளிதில் விரிசல் விட்டு விடும்; உயர்ந்த வகை விரிசல் விடாது.


இந்தியாவிலிருந்து ருத்ராட்ச மாலைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.