பக்கங்கள்

சனி, 12 டிசம்பர், 2009

வேட்டைகாரன் திரைவிமர்ச்சனம்

இன்றுமட்டும் நான் இணையத்தில் படித்த வேட்டைகாரன் பற்றிய தொகுப்பு சிறுபார்வை

கணேஷ் கிறுக்களிள் இருந்து                          


தமிழர் பதிவில் இருந்து

காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டுள்ள இவன் வேட்டைக்காரனள்ள இவன் ஒரு பிச்சைக்காரன், அரைவேக்காட்டு மடையன்

தமிழ் உறவுகளே! இந்த அரைவேக்காட்டு மடையனின் படங்களை புறக்கணிக்கவும் !!!
--------------------------------------------------------------------------------------------------------------------

வேட்டைக்காரன் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை உள்ளூரில் அல்ல... வசூலுக்கு பெரிதும் நம்பியிருக்கும் வெளிநாடுகளிலிருந்து.

காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நாடகமாடிய விஜய்யின் வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம் என ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும் இலங்கை ராணுவத்துக்கு வன்னிப் போர் காலத்தில் பாடல்கள் உருவாக்கிய ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்து பணியாற்றும் விஜய் ஆண்டனி, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தமிழ் உணர்வுக்கு எதிரான ஒரு சிங்களப் பாடலின் மெட்டையும் அப்படியே வேட்டைக்காரனில் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்தப் படத்தை அனைத்து தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு விஜய் தரப்பை அதிர வைத்துள்ளது.

இந்த எதிர்ப்பு கோஷத்தை தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்களாகவும் புலம்பெயர்த் தமிழர்கள் அனுப்பி வருகின்றனர்.


மீனகம் இணையத்தில் இருந்து

“வேட்டைக்காரன்” சூடு சுறணையின்றித் தமிழன் பார்த்து ரசிப்பானா? பிய்ந்த செருப்பால் அடிப்பானா?: சுவிஸ் இளையோர் பேரவை

பதிந்தவர்_கனி
boycott_traitor_filmவிஜயின் வேட்டைக்காரன் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டி சுவிஸ் தமிழ் இளையோர் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதன் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது:
தமிழனை வேட்டையாடியவர்களுடன் கொண்டாடி மகிழ்பவர்கள் தயாரிப்பில் வேட்டைக்காரன். சூடு சுறணையின்றித் தமிழன் பார்த்து ரசிப்பானா? பிய்ந்த செருப்பால் அடிப்பானா?
எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய சுவிஸ் வாழ்த் தமிழ் மக்களே!
வருகின்ற 19 ஆம் 20 ஆம் திகதிகளில் வேட்டைக்காறன்; எனும் திரைப்படம் சுவிஸ் எங்கும் திரையிடப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உங்களுடைய பொழுதுபோக்கை தடுக்கும் நோக்கத்துடன் உங்கள் பாசத்துக்குரிய தேசப்பற்றுள்ள பிள்ளைகளாகிய நாம் இவ் பகீரங்க அறிவிப்பை கோரிநிக்கவில்லை.
மாறாக உங்களது பொழுதுபோக்கு எமது இனஅழிக்கக் காரணமாக இருந்துவருபவர்களுக்கு வருமானம் பெற்றுக்கொடுப்பதையே எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நினைத்துப்பாருங்கள் மே 18 ஐ. எம் உறவுகளின் இரத்த ஆறு ஓடியபோது, கிழிந்து தொங்கிய உடல் உறுப்புக்களுடன் எவருமே எம்மைக் காப்பாற்ற வரமாட்டாரா என்று கதறியபோது தமிழகத்தின் அமாவாசை கருணாநிதி தனது கதிரை மோகத்தில் எமது உறவுகளைக் கைகழுவி விட்டான். எமது உறவுகளின் பிணங்களின் மேல் சிம்மாசனமிட்டிருந்தான்.
இச் சதிகாறக் குடும்பத்தின் நிறுவனமான “சண்” நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் இத்திரைப்படத்தை மானமுள்ள இத் தமிழ்ச்சாதி பார்க்குமா? எமது தமிழக மீனவர்களைக் எப்பொழுது சிங்கள இனவெறியர்கள் கொல்லத் தொடங்கினார்களோ அப்பொழுதே தொலைந்தது இந்திய இறையாண்மை. அப்படி இல்லாத இறையாண்மைக்காக தமிழரின் இறைச்சித் தசைகளை வேட்டையாடி கசாப்புக்கடை நடத்தியவர்களுக்கு அழிவாயுதம் கொடுத்த காங்கிரஸ் ஆட்சியின் கொள்கை வேட்டைக்காரன் இளையதளபதி என்பவருக்கு பிடித்துக்கொண்டுள்ளதாம்.
இனப்பற்றும், மண்பற்றும் உள்ள எமது தமிழ்ச்சமுதாயமே, ஆற்றலும் அறிவுமிக்க எமது இளையோர்களே இவ் அநியாயத்தைத் தட்டிக்கேழுங்கள். அது ஒருபுறமிருக்கு எம்மினத்தை வேட்டையாடி, எம் தாய்நாட்டை ஆக்கிரமித்து, தமிழ்த்தாயை மானபங்கப்படுத்தி, எமது உறவுகளை சிறைப்பிடித்தவர்களுக்கு களைப்பாற்றிக் கூத்துப்போட இத்திரைப்படத்தின்; இசையமைத்துள்ள விஜை அன்ரனி வெற்றிப்பாடலுக்கு இசையமைத்துக் கொடுத்துள்ளார்.
பாருங்கள் எமது அன்புக்கினிய உறவுகளே. ஒரு சதிகாறக் கும்பலே இத்திரைப்படத்தில் இணைந்துள்ளது. எம்மை வேட்டையாடியதால் தான் வேட்டைக்காறன் என்று பேயர் சூட்டினார்களோ தெரியவில்லை. மொத்தத்தில் வேட்டைக்காரன் தமிழனை வேட்டையாடியவன் என்பதே உங்கள் பிள்ளைகளின் பொருள்.
தமிழ்த் தேசியம் வாழுகிறதென்றால்; மானமுள்ள தமிழ்ச்சாதி வாழ்கிறதென்றால் இனி எவருமே எமது தலையில் மிளைகாயை அரைக்க முடியாது என்பதை வேட்டைக்காரனை வேட்டையாடி நிரூபித்துக்காட்டுங்கள்.
உங்கள் பிள்ளைகளாகிய நாம் மிகப்பெரும் விடுதலைக்கான பணியை சுமக்க ஆரம்பித்துள்ளோம். எம்மினத்தை பாதிக்கும் எவ்விடயமாகவிருந்தாலும் தட்டிக்கேட்கும் பணியை எம்மிடம் நீங்கள் கையளித்துள்ளீர்கள். அதை நாம் சரிவர முன்னெடுக்கவேண்டியது எமது கடமையாகும்.
உங்கள் பிள்ளைகளின் அன்பான வேண்டுகோளை ஏற்றுக்கொள்வீர்கள் என்று சந்தேகத்திக்கிடமின்றி நம்புகிறோம்.
வாழ்க தமிழ்த்தேசியம்.
தமிழ் இளையோர் பேரவை – சுவிஸ்

2 கருத்துகள்:

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

கலைஞர் டிவில வந்த செய்தி சூப்பர். வாழ்க வளரட்டும் உமது தொண்டு.
தல பார்த்து ஆட்டோ கீட்டோ ஏதாச்சு வூட்டுக்கு வந்துடப்போவுது...

RAJESH சொன்னது…

வாங்க.வாங்க நாஞ்சில்
வருகைக்கு நன்றி கருத்திற்க்கு மிக்க நன்றி