பக்கங்கள்

சனி, 12 டிசம்பர், 2009

மன்னார்குடி பாகம் 2

வாங்க மன்னார்குடி பாகம் 2க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

 எங்க ஊரின் அமைவிடம் 10.67° N 79.43° E

ஆகும்.  கடல் மட்டத்தில் இருந்து எங்கள் ஊர் சராசரியாக 6 மீட்டர் (19 அடி) உயரத்தில் இருக்கின்றது.
எங்க ஊரில் மொத்தம் 24 குளம் இருந்ததா பெரியவங்க சொல்வாங்க
ஆனா இப்ப பாதிக்குமேல இல்ல அதமட்டும் உறுதியா சொல்லமுடியும்
ஒரு காலத்துல எங்க ஊர்ல தண்ணிபஞ்சம் தலைவிரிச்சு ஆடுச்சாம்
அப்போதய மன்னர் ஊர் சுத்தி குளம் வெட்ட உத்திரவு பிறப்பித்தாக
தகவல்
ஊர் மக்கா பத்தி சொல்லாம இருப்பேன?

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 61,588 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மன்னார்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மன்னார்குடி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.கணக்கெடுப்பு பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
2009 தகவல் கைவசம் இல்லை
ஊர்ல நமக்கு சங்கம் 2,3 இருக்கு அது ஒரு இடம் டீ
கடை பெயர் நேதாஜி டீகடை
தினமணி செய்திதாள்ல கூட அதபத்தி செய்தி வந்துச்சு


ஓரு டீ போடும் தொழிலாளி ஒரு நாளில் எத்தனை டீ தயாரிக்கமுடியும்? ஒருங்கிணைந்த திருவாருர் மாவட்டம் மன்னார்குடியைச்சேர்ந்த டீ போடும் தொழிலாளி ஒரு நாளில் 5000 டீ போடுவதாக தினமணியில்
செய்தி வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டிலேயே அதிகமாக டீ போடும் அந்த தொழிலாளியின் பெயர் நேதாஜி. ஒரு நாளைக்கு 5000 டீ
போடுவது பெரிய செய்தியில்லை அவருக்கு. அந்த 5000 டீயையும் ஒரே ருசியுடன் தருவதுதான் செய்தி.
அவருடைய டீக்கடை அதிகாலை நான்கு மணிக்கு திறக்கப்படுகிறது. நண்பகலில் சற்று ஓய்வு. பிறகு சதா
சர்வ நேரமும் டீ...டீ...டீ..தான்.
மற்ற கடைகளைவிட இவருடைய கடையில் டீயின் விலை 50 பைசா கூடுதல். கூட்டத்துக்கு குறைவில்லை.
"கறவைப்பால் மட்டும் வாங்குகிறோம். இரண்டு அடுப்பு இருக்கும். ஒன்று தண்ணீர் கலக்காத பால் கொதிக்க.
இன்னொன்றில் ஒன்றுக்கு மூன்று என்கிற கணக்கில் தண்ணீர் கலந்த பால் கொதித்துக்கொண்டிருக்கும். டிக்காக்க்ஷனை தண்ணீரில் போடமாட்டோம். இரண்டாவது பாலில் போடுவோம். டிக்காக்க்ஷன் தயாரானதும் பழுக்கக்காய்ச்சிய முதல் பாலை சேர்த்தால் நேதாஜி பிராண்ட் டீ தயார்" என்கிறார்.
டீத்தூள் அதிகம் வேகக்கூடாதாம். பாலை நன்கு கொதிப்பேற்ற வேண்டுமாம். நல்ல டீ போட விரும்புவோருக்கு நேதாஜி தரும் டெக்னிகல் அட்வைஸ்.
நீங்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்தால் வரிசையில் கடைசி இடம்தான் உங்களுக்கு. பேசுவதை நிறுத்திவிட்டு வரிசையில் போய் நின்று கொள்ளுங்கள்.
நன்றி:தினமணி

 அப்புறம் இனிப்பு கடை அங்க நமக்கு சங்கம் இல்ல ஆனா டில்லி ஸ்விட் கடை இருக்கு அதபத்தி சொல்லனும்னா
மனிதன் என்றால் ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல் முந்திரி அல்வா என்றால், அல்வா பாதி முந்திரி பாதி. ஒரு கடிக்கு முந்திரியும் மறு கடிக்கு அல்வாவும் பல்லில் சிக்கும்; இரண்டும் சேர்ந்து ஒன்றாய் கரைந்து உள்ளே போகும் ருசியே அலாதிதான்!
அந்தக் காலம் தொட்டு மன்னார்குடியில் மட்டும் இந்த ருசி கிடைப்பதற்கு பாமணியாற்றுத் தண்ணீரும் ஒரு காரணம் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.
மன்னார்குடி அல்வா வரலாற்றில் ஒரு வினோதம் இருக்கிறது. அல்வாவில் அக்காலத்து ருசி அப்படியே இருந்தாலும் அல்வா விற்பவர்கள் ஒரே ஆட்கள் இல்லை என்பதுதான் அது. காலம் மாறும்போதெல்லாம் இங்கு அல்வா கடைக்காரர்களும் மாறுகிறார்கள்.
ஆனால், அந்த ருசி மட்டும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கடைக்கு வாய்க்கிறது. அதிலும் ஒரு வேடிக்கை – இப்படி பேர் வாங்குகிறவர்கள் வெளியூர்காரர்களாக இருப்பது.
அந்த வகையில் இந்தத் தலைமுறையில் அந்த ருசி “டெல்லி ஸ்வீட்ஸ்’ கடைக்காரர்களுக்குக் கிட்டியிருக்கிறது. ருசியைப் பிடித்தது எப்படி? கடை உரிமையாளர் விழுப்புரம் யுவராஜ் சொல்கிறார்:
“”இரு பங்கு கோதுமை, மூன்று பங்கு ஜீனி, ஒரு பங்கு முந்திரி, அரை பங்கு எண்ணெய், அரை பங்கு நெய், இன்னும் சில இத்யாதிகள். இவை இருந்தால் மன்னார்குடி அல்வாவைச் செய்துவிடலாம். ஆனால், கோதுமைப் பால் எடுப்பதில் தொடங்கி முந்திரியைப் போட்டு கிளறுவது வரை அது அதற்கான பக்குவத்தைக் கையாள வேண்டும். அதில்தான் இருக்கிறது வித்தை.
சரியாக 6 மணி நேரம் கோதுமையை ஊற வைக்க வேண்டும். ஒரு பங்கு கோதுமையில் அரை பங்கு பாலுக்கு மேல் எடுக்கக் கூடாது. அல்வாவில் எண்ணெய் அதிகம் இருந்தால் சுவை கொடுக்காது; முழுக்க முழுக்க நெய்யில் செய்தால் பதம் கொடுக்காது. இந்த இரண்டையும் சரி சமமாய் கலக்க வேண்டும்.
மன்னார்குடி அல்வாவுக்கு நாக்குப் பதம் கிடையாது; கைப்பதம்தான். பாகும் பாலும் சேர்ந்து கூடும்போது அல்வாவை எடுத்து உள்ளங்கையில் போட்டால் உருளைப்போல் உருள வேண்டும். உருண்டால் அது மன்னார்குடி பாணி அல்வா”
இன்னும் நிறைய இருக்கு அடுத்த பாகத்தில் பார்போம் மறக்காம்
ஓட்டு பொடுங்க பின்னுட்டம் இடுங்க
பதிவ படிச்சவங்க அனைவருக்கும் நன்றி..

18 கருத்துகள்:

ஜெட்லி... சொன்னது…

மன்னார்குடி பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டேன்....
ப்ளாகில் அந்த வண்ணத்துபூச்சி பறப்பது மாதிரி pointer மாற்றினால்
நன்றாக இருக்கும்...

வடுவூர் குமார் சொன்னது…

ஹை! என‌க்கு ப‌க்க‌த்து ஊரு தான்.
உங்கூரில் மாள‌வ‌ன் என்று யாராவ‌து தெரியுமா? என்னுட‌ன் எல் அன்ட் டி யில் ஒன்றாக‌ ப‌ணிபுரிந்த‌வ‌ர்.

ராஜேஷ் சொன்னது…

ஜெட்லி said..
வாங்க ஜெட்லி வருகைக்கு மிக்க நன்றி விரைவில் மாற்றுகிறேன்

ராஜேஷ் சொன்னது…

வாங்க வடுவுர்குமார் வருகைக்கு நன்றி
எனக்கு மனவாளன் தெரியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகன் அவரா?

V.Muthu kumaran சொன்னது…

Enna Thalaiva nalla irukikala? nannum mannargudi than thalai ippathan parthaen namma mannargudi perumaikalai ellam rompa nalla irukku thalai .ennada ivan nammalapoi thalai,valaunu sollurananinu ninaikathinga ,unmaiya sollurraen ungala ninaithal perumaiyaga irukku ,valka ,valarka umathu thondu

பெயரில்லா சொன்னது…

Arumai, Nanum Mannargudi thaan (Manai Nager) saudi Arabia vil irukiren

Barari சொன்னது…

MANNARGUDI ENDRAAL ENGALUKKU THERIVATHU ONDRU THAAN JEYAVIN THUNAIVI SASIKALA THAAN.

தம்பி.... சொன்னது…

நானும் மன்னையின் மைந்தன் தான் தோழா, FROM THE GREAT " உப்புகார தெரு "NOW IN SURAT-GUJARAT எங்க ஊர்காரருக்கு நான் VOTE போடலனா எப்படி, தொடரட்டும் உங்கள் பணி,வாழ்த்துக்கள்

ABU FROM SURAT......

ராஜேஷ் சொன்னது…

வாருங்கள் மாண்புமிகு தலைவர் முத்துக்குமார்
உங்கள் கருத்து என்னை உற்சாகபடுத்தியது
கருத்திற்க்கு மிக்க நன்றி மன்னார்குடியை பற்றி உங்களுக்கு தெரிந்த தகவல்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளாலாம் ஆனா தலைவர்லாம் அதிகம் பாஸ்..

ராஜேஷ் சொன்னது…

வாங்க கைப்புள்ள எனக்கு பிருந்தவன் நகர் இப்ப நான் சிங்கப்பூர்ல இருக்கேன் ஒட்டு போட்டு உற்சாக படுத்துனத்துக்கு நன்றி வுட்டாண்ட அடிக்கடி வாபா

SK சொன்னது…

Super... Continue pannunga..

Vaduvur Kumar Sir, Thamizh vaathiyar paiyanaa sir. oththai theruvula irunthaangala ?

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

வணக்கம் ராஜேஷ்.
சிங்கையிலயா இருக்கீங்க?
joseph.paulraj@gmail.com இது என்னோட மின்னஞ்சல் முகவரி. உங்க அலைபேசி எண் அனுப்புங்க. நாளைக்கு கூப்புடுறேன்.

வந்து சங்கத்துல ஐக்கியமாயிருங்க.

ரோஸ்விக் சொன்னது…

அட ஊரைப்பத்தின புள்ளி விபரம் நம்ம கேப்டன் அளவுக்கு கொடுத்திருக்கீங்க... :-)
அருமை நண்பரே.
சிங்கை பதிவர் குழுமம் தங்களை அன்போடு வரவேற்கிறது. :-)

Prathap Kumar S. சொன்னது…

தல மன்னார்குடி எந்தமாவட்டத்துல வருது...? மன்னார்குடில ஓரு பிரபலத்தோட சொந்த ஊராச்சே...யாருன்னு நினைவு வரமாட்டேங்குது... நடத்துங்க...நடத்துங்க..உங்கஊர்காரவுக சப்போட்டு வாங்க நல்ல ஐடியா..

தம்பி.... சொன்னது…

பிருந்தா நகரா, அப்ப இந்த மூஞ்சிய நான் கண்டிப்பா பாத்திருக்கனுமே.....
கொஞ்சம் zoom செஞ்சு பாக்கிறமாறி ஒரு photo போடுங்க RAJESH....
அறிவன்ணன் ஏரியாவா ?
ATHLETE பாண்டி ஏரியாவா ?
என்னோட NAME: ABUTHAKIR ( AIRLIONS CRICKET CLUB ), I HOPE YOU HAVE HEARD ABOUT ME.

ராஜேஷ் சொன்னது…

வருகைக்கு நன்றி ரோஸ்விக்

ராஜேஷ் சொன்னது…

வாங்க பிரதாப் என்னடா தலையகாணுமேனு பார்தேன் வருகைக்கு நன்றி..

ராஜேஷ் சொன்னது…

வாங்க கைப்புள்ள பாண்டவர் வீட்டிர்க்கு எதிரில் பச்சைநிற வண்ணம் பூசப்பட்டவீடு