பக்கங்கள்

வெள்ளி, 25 டிசம்பர், 2009

மன்னார்குடி பாகம் 3

அன்பு நண்பர்களே ஆருயுர் தோழர்களே ,பதிவுலக பெருமக்களே இதோ மன்னார்குடி பாகம் 3
இது ஒரு புகைபட காணொளி தொகுப்பு

இந்த வரைபடம் எங்கள் ஊரை சுற்றிஉள்ள கிராமங்களின்
விபரம்

 இது இராஜகோபால சுவாமி திருக்கோவிலின் திரு தோற்றம்


இராஜ கோபுர தரிசனம்


 இது திரு தேர் பங்குனிமாதம்  நடைபெறும் திருவிழாவின் பொழுது
தேசிய மேல்நிலை பள்ளி மாணவர்களால் உற்சாகமாக இழுக்கபடும்
நானும் இழுத்திருக்கேன் சந்தோசமா இருக்கும் ம்ம்ம் ஸ்ஸ்ஸ்
ஒன்னு இல்ல பெருமூச்சு விட்டேன் 5 வருசம் ஆச்சு பாத்து.


இது எங்க கோவில் யானைங்க பார்க்க பார்க்க பரவசம் தான் போங்க இதுக்கு முன்னாடி செங்கமலம் இருந்துச்சு அது நோய்வாய் பட்டு செத்து போச்சு ஒரே சோகம் தான் போங்க அப்பறம் புதுசா ஒரு குட்டி யானை வந்துசு அதான் இது


இது தெப்பக்குளம் ரொம்ப பெருசு 6,7 வருசத்துக்கு முன்னாடி தூர்வாருனங்க
இதுல ஒருகரைல இருந்து மையமண்டபத்துக்கு போட்டி வச்சு நீந்தியே போவோம் அப்ப நான் தான் கடைசிசிசிசி......

  
அப்பறம் இங்க இரண்டு கல்லூரி இருக்குங்க 1 அரசு கலை கல்லூரி
2 தனியார் கல்லூரி
எங்க கோவில் 18 நாள் திருவிழா மற்றும்கோவில் உள்,வெளிதோற்றம் பற்றிய காணொளி பாருங்கஇப்போதைக்கு இதான் அப்பறம் மிச்சத பார்ப்போம் சரியா...
மறக்காம ஒட்டு குத்துங்க உங்க கிட்ட ஏதாவது கருத்து இருந்த சொல்லுங்க இல்லாடியும் சொல்லுங்க ஒகே தான..

7 கருத்துகள்:

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

அருமையான தகவல்கள் தொடருங்கள் ...

RAJESH சொன்னது…

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அருமையான தகவல்கள் தொடருங்கள் ...//
நன்றி நண்பா உங்கள் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது

ஹாலிவுட் பாலா சொன்னது…

உங்க ஊருக்கு, இந்த போட்டாக்களா ஃபேமஸ்?? :)

வேற ஒன்னாச்சே?? :) :) :)

முரளிகுமார் பத்மநாபன் சொன்னது…

கமலாயலம் தெப்பகுளம் இல்லையா இது?

RAJESH சொன்னது…

வாங்க பாலா அண்ணா அடியேனின் ஏரியாவுக்கு வந்தமைக்கு நன்றி

RAJESH சொன்னது…

கமலாலயம் நான்கு வீதியும் நெரிசல் மிகுந்தது பத்மநாதன் சார்

க.பாலாசி சொன்னது…

எனக்கும் கமலாலயம் குளம் மாதிரியே தெரிந்தது. இரண்டின் அமைப்பும் ஒத்தே உள்ளது.

மண்ணின் பெருமைகளை பறைச்சாற்றும் நல்ல இடுகை... தொடருங்கள்...